ஆங்கிரி மின்னவ் வின்டேஜ் - பெருநிறுவனப் பொறுப்பு விதித்தொகுப்பு

எமது “ஆங்கிரி மின்னவ் வின்டேஜ்” நிறுவனத்தில், எமது அனைத்து இயக்கங்களிலும் சட்டப்படியான, நன்னெறியான மற்றும் பொறுப்பான நடத்தையை உள்ளடக்கிய தனிச்சிறப்புத்தன்மையுடன் விஞ்சி நிற்கும் செந்தரத்தை எமது தொழிலின் அனைத்து அம்சங்களிலும் பேணுவதற்கு நாங்கள் ஈடுபாட்டுறுதியுடன் உள்ளோம்.

குழும உரிமமளிப்பைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குழும நிறுவனத்திற்கும் அல்லது அதன் உரிமமளிப்பதற்காக அமர்த்தப்பட்டவருக்கும், உரிமம் அளிக்கப்பட்ட வேறுபடுத்தும் அடையாளக்குறிகளைத் தாங்குகின்ற அனைத்து உருப்படிகளின் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு தொழிற்சாலையின் அமைவிடத்தையும் (தொழிற்சாலையின் பெயர், தொடர்பு பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திப்பொருட்கள் மற்றும் தொழில் கூட்டின் இயல்பு ஆகியவை உட்பட) வெளிப்படுத்துவதற்கு நாங்கள் சம்மதிக்கிறோம்.  மேலும், ஏதாவது தொழிற்சாலையின் அமைவிடம் மாற்றப்பட்டால், அதனைத் தொடர்ந்து அத்தகைய தகவல்கள் புதுப்பிக்கப்படும் என்று நாங்கள் சம்மதிக்கிறோம்.  குழும நிறுவனம் அல்லது அதன் உரிமமளிப்பதற்காக அமர்த்தப்பட்டவர் இந்தத் தகவலை விநியோகிப்பதற்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல், இந்தத் தகவலை மூன்றாம் தரப்புகளுக்கு வெளிப்படுத்துவதற்குத் தன்னகத்தே முழு உரிமை கொண்டுள்ளார்.

எங்கள் தொழிலுக்காகப் பின்வரும் செந்தரங்களை நாங்கள் நிறைவேற்றுவோம் அல்லது நிறைவேற்றுவதில் விஞ்சுவோம் மற்றும் எங்களைப் போலவே எங்களுடைய சப்ளையர்கள் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கேட்போம்: 

1. கட்டாயத் தொழிலாளர் யாருமில்லை

கட்டாயச் சிறைத் தொழிலாளர், கட்டுப்பாட்டு ஒப்பந்தத்துக்குரிய தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர், அல்லது இதர கட்டாயத் தொழிலாளர் ஆகிய யாரையும் நிச்சயமாகப் பயன்படுத்த மாட்டோம்.

2. குழந்தைத் தொழிலாளர் யாருமில்லை

15 வயதுக்குக் (அல்லது வளர்ந்துவரும் நாடுகளைப் பொறுத்தவரை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நடைமுறைகளுக்கு இணக்கமாக, உற்பத்திச் செய்யப்படும் நாட்டின் சட்டம் அத்தகைய விதிவிலக்கை அனுமதித்தால், 14 வயதுக்குக் கீழே உள்ள யாரையும் நாங்கள் பணியமர்த்த மாட்டோம்) கீழே உள்ள யாரையும் நாங்கள் பணியமர்த்த மாட்டோம். கட்டாயக் கல்வியை நிறைவு செய்வதற்கான வயது, மேலே கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச வயதுக்கான செந்தரத்தை விட அதிகமாக இருக்கும் இடங்களில் எல்லாம், கட்டாயக் கல்வியை முடிப்பதற்கான அதிகபட்ச வயது இந்தப் பிரிவுக்குப் பொருந்தும். அரசாங்க, மனித உரிமைகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களுடன் கலந்தாலோசிப்பதற்கும், இந்த விதித்தொகுப்பை நிறைவேற்றுவதன் விளைவாக அல்லது நடைமுறைப்படுத்துவதன் விளைவாக வேலைவாய்ப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளின் மீதான எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதற்கான நியாயமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நாங்கள் சம்மதிக்கிறோம்.

3. தொந்தரவு அல்லது தவறாகப் பயன்படுத்தல் இல்லாமை

ஒவ்வொரு ஊழியரும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடத்தப்படுவார்கள். எந்தவொரு ஊழியரும் எந்தவொரு உடலியல், பாலியல், உளவியல் அல்லது வாய்மொழி தொந்தரவு அல்லது தவறாகப் பயன்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். நாங்கள் எந்தவொரு வடிவிலான உடல்ரீதியான தண்டனையையும் பயன்படுத்த மாட்டோம் அல்லது சகித்துக் கொள்ள மாட்டோம்.

4. பாகுபாடு காட்டாமை

கூலிக்குப் பணியமர்த்தல், ஊதியம், பலன்கள், முன்னேற்றம், ஒழுக்கம், பணி முடிப்புச் செய்தல் அல்லது பணி ஓய்வு பெறுதல் உள்ளிட்ட அல்லது பாலினம், இனம், மதம், வயது, ஊனம், பாலினச் சார்பு, தேசியம், அரசியல் கருத்து அல்லது சமூக அல்லது இன பூர்வீகம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு நபரும் வேலைவாய்ப்பில் எந்தவொரு பாகுபாடு காட்டுதலுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.

5. சுகாதாரநலம் மற்றும் பாதுகாப்பு

பணியின் காரணமாக எழுகிற, பணியுடன் தொடர்புடைய, அல்லது பணியின் போக்கில் நிகழ்கிற, அல்லது முதலாளியின் கட்டமைப்பு வசதிகளின் இயக்கத்தின் விளைவாக ஏற்படும் விபத்துக்களையும் சுகாதாரநலக்கேடுகளையும் தடுக்க நாங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் சுகாதாரநலமான பணியிடச் சூழலை வழங்குவோம். 

6. கூட்டுச்சேருதல் சுதந்திரம் மற்றும் பொதுக்கூட்டுப்பேரம்

கூட்டுச்சேருதல் சுதந்திரம் மற்றும் பொதுக்கூட்டுப்பேரம் பெறுவதற்கான தொழிலாளர்களின் உரிமையை நாங்கள் அங்கீகரித்து மதிக்கிறோம்.

7. கூலிகள் மற்றும் பலன்கள்

ஒரு ஊழியரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குக் கூலிகள் அவசியம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நாங்கள் குறைந்தபட்ச ஊதிய வரம்பு என்ற முறையில், உள்ளூர் சட்டத்தால் தேவைப்படும் குறைந்தபட்ச கூலியை அல்லது உள்ளூரில் நடைமுறையில் உள்ள தொழில்துறை கூலியால் தேவைப்படும் குறைந்தபட்ச கூலியை, இவ்விரண்டில் எது அதிகமாக உள்ளதோ அந்தக் கூலியையும், சட்டப்படி கட்டாயமாக உள்ள பலன்களையும் தொழிலாளர்களுக்கு வழங்குவோம். 

8. பணி நேரங்கள்

அசாதாரணமான சூழ்நிலைகளில் தவிர, மணிநேர அடிப்படையிலான மற்றும் / அல்லது ஒதுக்கீட்டு அடிப்படையிலான கூலியைப் பெறும் தொழிலாளர்கள் (i) பின்வருவனவற்றுள் எது குறைவாக இருக்கிறதோ அதை விட அதிகமாகப் பணியாற்றத் தேவையில்லை (அ) வாரத்திற்கு 48 மணி நேரம் மற்றும் 12 மணிநேர மிகைப்பணிநேரம் அல்லது (ஆ) நாங்கள் இயங்குகிற நாட்டின் சட்டத்தால் அனுமதிக்கப்படும் வழக்கமான பணி நேரங்களில் மற்றும் மிகைப்பணி நேரங்களில் உள்ள
வரம்புகள், அல்லது அத்தகைய நாட்டின் சட்டங்கள் பணி நேரத்தை வரம்புக்குள் கட்டுப்படுத்தவில்லை எனில், அத்தகைய நாட்டில் உள்ள வழக்கமான பணி வாரத்துடன் கூடுதலாக 12 மணிநேர மிகைப்பணிநேரம்; மற்றும் (ii) ஒவ்வொரு ஏழு நாள் காலக்கட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறை பெறுவதற்கு உரிமையுள்ளவர்கள் ஆவர்.

9. மிகைநேரப்பணிக்கான இழப்பீடு

தங்களுடைய வழக்கமான பணிநேரங்களுக்காக, மணிநேர அடிப்படையிலான, மற்றும் / அல்லது ஒதுக்கீட்டு அடிப்படையிலான கூலியைப் பெறும் தொழிலாளர்கள், இவற்றுக்காகப் பெறுகின்ற இழப்பீட்டுத் தொகையுடன் மேலதிகமாக, தாங்கள் செய்யும் மிகைப்பணிநேரங்களுக்காக, இயக்கப்படும் நாட்டில் உள்ள சட்டப்படி தேவைப்படுவதற்கேற்ப ஒரு உயர்மதிப்பு விகிதத்தில் அல்லது அத்தகைய சட்டங்கள் இல்லாத நாடுகளில், குறைந்தபட்சம் தங்களுடைய வழக்கமான மணிநேர இழப்பீட்டு விகிதத்திற்குச் சமமான ஒரு விகிதத்தில் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.

10. சுற்றுச்சூழலியல் பாதுகாப்பு

அனைத்து பொருந்தக்கூடிய சுற்றுச்சூழலியல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் நாங்கள் இணக்கமாக நடப்போம்.

11. பதிப்பு

இந்த நடத்தை விதித்தொகுப்பின் நகல் ஒன்றை, தொழிலாளர்களால் எல்லா நேரங்களிலும் எளிதில் அணுகக்கூடிய ஒரு பொது இடத்தில், உள்ளூர் மொழியில் காட்சிப்படுத்தல் உள்பட, நாங்கள் இந்த நடத்தை விதித்தொகுப்பின் ஏற்பாடுகள், அனைத்து தொழிலாளர்களுக்கும் தகவல் தொடர்பாடப்படுவதை உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.

குறிப்பு: எங்கள் உற்பத்திப்பொருட்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் இந்த ஆவணம் பின்வரும் மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்: தமிழ், கன்னடம் மற்றும் ஒடியா.

12. பிற சட்டங்கள்

விற்பனைப் பொருட்களின் உற்பத்தி, விலையிடல், விற்பனை, விநியோகம் மற்றும் தன்னார்வ தொழில்துறை செந்தரங்கள் தொடர்புடையவை உள்ளிட்ட அனைத்துப் பொருந்தக்கூடிய சட்டங்களுடனும் ஒழுங்குமுறைகளுடனும் நாங்கள் இணக்கமாக நடப்போம். 

========================

ஆங்கிரி மின்னவ் வின்டேஜ் நிறுவனத்தின் பெருநிறுவனப் பொறுப்பு நடத்தை விதித்தொகுப்பு எமது சப்ளையர்களுக்குப் பொருந்தும் என்பதால்:

ஆங்கிரி மின்னவ் வின்டேஜ், எமது உற்பத்திப்பொருட்களின் தயாரிப்பில் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொரு தொழிற்சாலையின் உடைமையுரிமையோடு / நிர்வாகத்தோடு நேருக்கு நேர் சந்தித்துப் பேசும், மற்றும் அவர்களின் தொழிற்சாலையில் இருந்து உற்பத்திப்பொருளை கொள்முதல் செய்வதற்கு நாங்கள் சம்மதிப்பதற்கு முன்னதாக, அவர்கள் பின்வருவனவற்றுக்குச் சம்மதிக்க வேண்டும்: 

1. அவர்கள் ஒரு நம்பகமான சப்ளையர் என்ற முறையில் அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கு, எமது பெருநிறுவனப் பொறுப்புச் செந்தரங்களுடன் அவர்கள் போதுமான அளவுக்கு இணக்கத்தன்மையுடன் இருக்கிறார்களா என்று நாங்கள் மதிப்பாய்வு செய்வதற்கு எங்களையும், எங்களுடைய பிரதிநிதிகள் எவரையேனும் தொழிற்சாலை தளத்தை முன்னறிவிப்பின்றிப் பார்வையிடல்கள்/ஆய்வுகள் செய்ய அவர்கள் அனுமதிக்க வேண்டும்.

2. நாங்கள் நியாயமான தொழிலாளர் கூட்டுச்சேருதலைக் (FLA – www.fairlabor.org ) கொண்டிருப்பதற்கு அல்லது FLA பொருத்தமானது என்று கருதுவதற்கேற்ப FLA-இன் உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி தொழிற்சாலை தளத்தில் தணிக்கைகளை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.   நாங்கள் FLA-இன் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்பதையும், எனவே அவ்வாறு இருக்கிறபடியால் எமது உற்பத்திப்பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற அனைத்து தொழிற்சாலைகளும் FLA தணிக்கைகளுக்கு உட்பட்டவை என்பதையும்
எமது சப்ளையர்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்ள வேண்டும்.

3. மூன்றாம் தரப்பினரால் செய்யப்படும் காலமுறை சுற்றுச்சூழலியல் நீடிப்புத்திறன் மதிப்பீடுகளை அனுமதிக்க வேண்டும்.

4. நாங்கள் ஒரு முறைசார்ந்த பெருநிறுவனப் பொறுப்பு நடத்தை விதித்தொகுப்பைக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் எமது பெருநிறுவனப் பொறுப்பு விதித்தொகுப்பில் உள்ள அனைத்து உருப்படிகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் நிறைவேற்ற வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

5. எமது எழுத்துப்பூர்வமான பெருநிறுவனப் பொறுப்பு நடத்தை விதித்தொகுப்பு, அவர்களின் தொழிற்சாலையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் (இடங்களில்), அப்பகுதியில் பேசப்படும் முக்கிய மொழியில், அனைத்து தொழிலாளர்களாலும் அதை வாசிப்பதற்கு அனுமதிக்கப்படும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். மேலும், பெருநிறுவனப் பொறுப்புச் செந்தரங்களைப் பற்றித் தொழிலாளர்களுக்குத் தெரிவிப்பதற்கும், பெருநிறுவனப் பொறுப்புச் செந்தரங்கள் பற்றி ஒழுங்காகத் தொழிலாளர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கும் தொழிற்சாலையின் நிர்வாகம் சம்மதிக்க வேண்டும். 

குறிப்பு: எமது வெளிநாட்டுத் தயாரிப்பு சீனாவிலும், இந்தியாவிலும் தயாரிக்கப்படுகிறது, எனவே அவ்வாறு இருக்கிறபடியால், எமது CR விதித்தொகுப்பை சீனாவுக்காக மாண்டரின் மொழியிலும், இந்தியாவுக்காகத் தமிழ், கன்னடம் மற்றும் ஒடியா மொழிகளிலும் நாங்கள் மொழிபெயர்த்து இருக்கிறோம். 

6. பெருநிறுவனப் பொறுப்பு விதித்தொகுப்பின் எந்தவொரு மனத்தால் உணரப்படும் மீறல்களும் தொழிலாளர்களால் நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்படும் வகையில் ஒரு அமைப்பு உரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும். 

7. அவர்களின் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட ஏதாவது குறிப்பிடத்தக்க சட்ட பிரச்சினைகள் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும், அதாவது தொழிற்சாலைக்கு எதிராக அண்மைய அல்லது நிலுவையில் உள்ள அரசாங்க அமலாக்க நடவடிக்கைகள் ஏதாவது இருக்கின்றனவா? தொழிற்சாலைக்கு எதிராகத் தொழிலாளர்களிடம் இருந்து அல்லது தொழிலாளர் அமைப்புகளிடம் இருந்து ஏதாவது நடப்பில் உள்ள வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவா?

8. தொழிற்சாலையின் பொதுவான பகுதியில் தற்போது நடைமுறையில் உள்ள கூலி என்ன என்பதையும், அந்தப் பகுதியில் தற்போது நடைமுறையில் உள்ள கூலி தொடர்பாக அவர்களின் உண்மையான கூலி (வரம்பு) என்ன என்பதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.